காத்திருந்த கார்த்தி எம்.பி.,; கண்டுகொள்ளாத சீமான்

காரைக்குடி தொகுதியில் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நடைபயணமாக சென்று போலீஸ் காலனி, அண்ணா நகர் பகுதியில் காங். , வேட்பாளர் மாங்குடிக்காக நேற்று ஓட்டு சேகரித்தார்.

காரைக்குடி அழகப்பர் வாக்கர்ஸ் கிளப்பில், சீமான் நேற்று ஓட்டு சேகரிக்க வந்தார். கிளப் நிர்வாகிகளிடம் பேசிய பின், அவர் நடைபயிற்சி மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார். சீமான் வந்த சிறிது நேரத்திலேயே காங்., வேட்பாளர் மாங்குடிக்கு ஓட்டு சேகரிக்க எம்.பி., கார்த்தியும் வந்தார். இருவரும் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சீமான் வந்ததை அறிந்த கார்த்தி, அவரை சந்திக்க, வாயிலில் 15 நிமிடங்கள் காத்திருந்தார். ஆனால் தொண்டர்கள் சூழ வந்த சீமான், கார்த்தி காத்திருந்த இடம் அருகே நின்று சில நிமிடங்கள் யோசித்து விட்டு, உடனடியாக அங்கிருந்து சென்றார். இதனால் கார்த்தி ஆதரவாளர்கள் கடுப்பாயினர்.

Advertisement