குவியும் கூட்டம்

சென்னையின் தாம்பரத்தை ஒட்டிய வரம் தொகுதியில் ஜனநாயகம் கட்சி சார்பில் போட்டியிடும் பெருமாள் நபர், போகும் இடமெல்லாம் கைகூப்பி வணக்கம் தெரிவித்தபடியே, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்கிறாராம். 'தொகுதியில் நான் எம்.எல்.ஏ., கிடையாது; நீங்க தான் எம்.எல்.ஏ., என்ன வேண்டுமோ, தயக்கம் இல்லாமல் கேட்டு வாங்கிக்கோங்க. இறைவன் நிறைய கொடுத்திருக்கிறார்...' என்று சொல்ல, தொகுதியில் பெருமாளைப் பார்த்தாலே கூட்டம் குவிகிறதாம்.



@block_P@செட்டிங் போட்டி

விசில் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவராக இருக்கும் வில்வித்தை நபர், வாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், அங்கே அவரை எதிர்த்து போட்டியிடுபவர், அவருடைய முன்னாள் நண்பர் என்பதால், அதுவே இப்போது பிரச்னையாகி இருக்கிறதாம். 'இருவரும் செட்டிங் போட்டுக் கொண்டு, தேர்தலில் போட்டியிடுகிறார்' என வில்வித்தை நபரின் மைத்துனர் புதுச்சேரியில் இருந்து வந்து பிரசாரம் செய்து விட்டுப் போக, வில்வித்தை நபர் கடும் கோபத்தில் உள்ளாராம். block_P

Advertisement