பண திண்டாட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுத்தை கட்சி போராடி பெற்ற தொகுதியில், செல்வனானவரை வேட்பாளர் ஆக்கினார் தலைவர். அவர், தேர்தலில் பணம் இல்லாமல் திண்டாட, தலைவரிடம் சொல்லி, பணத்துக்கு ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டாராம். உடனே, அந்த தொகுதியில் மக்கள் பிரதிநிதியாக இருந்தவரை அழைத்து, செல்வனுக்கு பணம் கொடுங்கள் என்று கேட்க, மக்கள் பிரதிநிதியான பாபுவானவர், வெளி மாநிலத்துக்குச் சுற்றுலா சென்று விட்டாராம்.

@block_B@ ஆட்சி அமையாது

கர்நாடகாவை ஒட்டிய சூர் தொகுதியில், எந்த கட்சித் தலைவர் பிரசாரத்தில் ஈடுபட்டாலும், அந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பில்லையாம். இப்படியொரு சென்டிமென்ட் காதுக்கு வரவே தான், இலைக்கட்சித் தலைவர், அந்த ஊருக்கு பிரசாரத்துக்கு செல்வதையே தவிர்த்து விட்டாராம். ஆனாலும், சூரிய கட்சித் தலைவர், 'இந்த சென்டிமென்டை உடைத்துக் காட்டுவேன்' என்று சொல்லி, சூருக்கு பிரசாரத்துக்குச் செல்ல, கட்சியினர் நடுங்கிக் கொண்டிருக்கின்றனராம்.block_B

@block_Y@ ஆடியோ அலறல்

தென் மாவட்டத்தின் தேவநல்லுாரில் போட்டியிடும் சூரிய கட்சியின் ராஜாவானவர், முக்குலத்தோர் மற்றும் நாடார் இனத்தோரை மிகக் கடுமையாக பேசி வைத்திருந்தாராம். அந்த பேச்சுகளை, தேர்தல் களத்தில் ஆடியோ பதிவாக்கி, எதிர்த்து போட்டியிடுவோர் பரப்பி விடுகின்றனராம். இதனால், இரு இனத்தவர் ஓட்டுகளும் தனக்கு வராமல் எதிர்பக்கம் போய்விடுமோ என்ற அச்சத்தில், இரு இனத் தலைவர்களையும் தேடி ஓடி காலில் விழாத குறையாக கெஞ்சுகிறாராம் ராஜாவானவர்.block_Y

@block_G@ மறுத்த சிங்

முருகன் குடிகொண்டிருக்கும் செந்துாருக்கு வந்தார் நாத் சிங் அமைச்சரவை பிரதிநிதி. உள்ளூரில் போட்டியிடும் தாமரை கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேளுங்களேன் என்று லோக்கல் கட்சியினர் சொல்ல, சிங் மறுத்து விட்டாராம். காரணம், வேட்பாளர் குறித்து அவருக்கு போன ரிப்போர்ட் தானாம். செந்துாரில் பிரசாரம் செய்யாத அவர், அங்கிருந்து ராதா பெயர் கொண்ட புரத்துக்கு, தன் கட்சி வேட்பாளருக்கு பிரசாரம் செய்ய சென்று விட்டாராம்.block_G

Advertisement