'துள்ளி துள்ளி' பதின் பருவ பயிற்சி பல்லடத்தில்துவங்குகிறது

பல்லடம்:இன்றைய இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் நோக்கில், 'துள்ளித் துள்ளி' என்ற பதின் பருவ (டீன் ஏஜ்) பண்பு பயிற்சி முகாம் பல்லடத்தில் (22ம் தேதி) தொடங்குகிறது.

திருப்பூர் வெற்றி நலவாழ்வு மையத் தலைவர் சுந்தர்ராஜ் கூறியதாவது:

குழந்தைகளை நல்வழிப்படுத்துவதில் இன்றைய பெற்றோர் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பதின் பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் யாருடைய அறிவுரையையும் ஏற்கும் மனநிலையில் இருப்பதில்லை. நல்லது, கெட்டது எது என்பதைப் பிரித்தறியத் தெரியாத அந்தப் பருவத்தில் அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்துவது அவசியம். இதற்காகவே இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



முகாம் விவரங்கள்:

இடம்: வனம் அமைப்பு, வனாலயம் வளாகம், பல்லடம்.

பெண் குழந்தைகளுக்கு: ஏப்ரல் 22 முதல் மே 3-ம் தேதி வரை.

ஆண் குழந்தைகளுக்கு: மே 6 முதல் மே 17-ம் தேதி வரை.

முகாமில் கலைத்துறை, மருத்துவம் மற்றும் பொது வாழ்க்கை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் பங்கேற்று மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க உள்ளனர். முகாம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 77080 69255, 99447 25100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement