காந்தி நகர் ஏ.வி.பி. பள்ளி 15வது ஆண்டு விழா

திருப்பூர்:திருப்பூர் காந்தி நகர் ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் 15-வது ஆண்டு விழா, கல்விக்குழுமத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. மாற்றம் பவுண்டேசன் நிறுவனர் சுஜித்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

கல்விக்குழுமச் செயலாளர் பொன்னுத்தாய் அருள்ஜோதி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். பொருளாளர் லதா வரவேற்றார். முதல்வர் ராஜேஷ் 2025--2026-ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். 'மாற்றத்தை நீயே உருவாக்கு' என்ற மையப்பொருளில் மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. 2500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா நன்றி கூறினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் மாணவர் மன்றத்தினர் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.

Advertisement