கெஜ்ரிவால் வழக்கில் இருந்து விலக பெண் நீதிபதி மறுப்பு: அரசியல் அழுத்தங்களுக்கு நீதி தலைவணங்காது என விளாசல்
புதுடில்லி:'மதுபான கொள்கை தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்து, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விலக வேண்டும்' என, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் புதிதாக மனு தாக்கல் செய்து இருந்தார். அதற்கு, 'அரசியல் அழுத்தங்களுக்கு நீதி தலைவணங்காது' என கூறி, நீதிபதி வழக்கு விசாரணையில் இருந்து விலக, அந்த பெண் நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
டில்லி முதல்வராக, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் இருந்த போது, மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., ஊழல் வழக்கையும், அமலாக்கத் துறை பணமோசடி வழக்கையும் பதிவு செய்தன.
இந்த வழக்கில், அப்போது முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில், டில்லி ரோஸ் அவென்யூ விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
அதே சமயம், அமலாக்கத் துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றம் பிணை வழங்கியபோது, அதில் சில குறைபாடுகள் இருப்பதாக கூறி, அந்த உத்தரவை டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஸ்வர்ண காந்தா சர்மா நிறுத்தி வைத்தார். இதனால், கெஜ்ரிவால் தரப்புக்கு அப்போது பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், விசாரணை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து, சி.பி.ஐ., தரப்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவும், நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையிலேயே விசாரணைக்கு வந்தது. இதனால், தங்களுக்கு நடுநிலையான நீதி கிடைக்காது என ஆட்சேபனை தெரிவித்து, கெஜ்ரிவால் தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விலக வேண்டும் என கோரப்பட்ட இருந்தது.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா கூறியதாவது:
வழக்கில் இருந்து விலகினால், கெஜ்ரிவால் தரப்பு சொன்னது போல, பாரபட்சமானவர் என்ற முத்திரை குத்தப்படும். என் முந்தைய தீர்ப்புகள் மீதும் சந்தேக நிழல் படிவதற்கு அது வாய்ப்பாகி விடும்.
விலக முடியாது என கூறி, விசாரணை முடிவுக்கு பின், தீர்ப்பு கெஜ்ரிவாலுக்கு எதிராக அமைந்தால், 'ஏற்கனவே நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோமே, பாரபட்சமாக செயல்படுவார் என கூறினோமே, அது மாதிரியே ஆகிவிட்டது' என கெஜ்ரிவால் தரப்பு தங்கள் வாதத்தை நிலை நிறுத்த உதவும்.
வருங்காலத்தில் தங்களுக்கு பிடிக்காத நீதிபதிகள் மீது இப்படி முத்திரை குத்தி, வழக்கு விசாரணையில் இருந்து அவர்களை நீக்க அரசியல்வாதிகள் முயல்வர். இது, நீதிபதிகள் மீது சமூகத்தில் தவறான பிம்பத்தை கட்டமைத்து விடும். எனவே, இந்த முரண்பாடான சூழலில், இவ்வழக்கில் இருந்த விலக முடியாது. அரசியல் அழுத்தங்களுக்கு நீதி தலைவணங்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீதிபதிக்கு பாராட்டுக்கள். இதே போன்று நீதிபதிகள் தைரியமாக இருக்க வேண்டும். சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
பெயரில் ஜாதியின் பெயரை வைத்துக் கொண்டுள்ள நீதிபதிகள் பெரும்பாலும் நேர்மையாக/சுதந்திரமாக செயல்படுவது இல்லை.
சரியான பெண் நீதிபதி அப்படியல்லவா நீதிபதிகள் இந்நாட்டில் இருக்க வேண்டும் அவர்களை யாருமே தப்பாக மதிப்பீடு செய்ய வாய்ப்புகளை கொடுக்கக்கூடாது கொடுக்கும் நீதியை அவர்கள், நிலைநாட்டவேண்டும் இல்லையேல் அவர்கள் நீதிபதிகள் அல்ல
இந்த இடத்தில் கெஜ்ரிவால் ஒரு குற்றவாளி. காரணம் எதுவாக இருந்தாலும் வழக்கில் இருந்து நீதிபதி விலக மனு தாக்கல் ஒரு கிரிமினல் குற்றம். கெஜ்ரிவால் மற்றும் மனு தாக்கல் செய்த வழக்கறிஞரை நீதிபதி உடன் சிறை படுத்த வேண்டும். இவர்களை இப்படி விட்டால், நீதிபதியை கூண்டில் ஏற்றி விடுவர்.