தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர் வி.சி., தலைவர் நன்றி கடன் செலுத்த வி.சி., வேட்பாளர் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி: தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக வாழ்க்கையே தியாகம் செய்துள்ள வி.சி., தலைவருக்கு நன்றி கடன் செலுத்த பானை சின்னத்தில் ஓட்டளிக்குமாறு வி.சி., வேட்பாளர் வேண்டுகோள் விடுத்தார்.
கள்ளக்குறிச்சி தொகுதி வி.சி., வேட்பாளர் மாலதி, சிறுவங்கூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஓட்டு சேகரித்து பேசியதாவது; கள்ளக்குறிச்சி தொகுதியில் தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு சமுதாய மக்கள் பலர் வசிக்கின்றனர். இச்சமுதாய மக்கள் தொழில், கல்வி அறிவில் முன்னேற்றம் அடைய வி.சி., தலைவர் திருமாளவன், இன்று வரை திருமணம் கூட செய்து கொள்ளாமல் பாடுபட்டு வருகிறார்.
நான் அவரது சொந்த அக்கா மகள். எங்கள் பாட்டி, பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்து கொள்ளாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனது வாழ்க்கையே தியாகம் செய்துள்ளார். அவரது ஒரே நோக்கம் இச்சமுதாய மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே. எனவே, தாழ்த்தப்பட்ட மக்கள் வி.சி., தலைவர் திருமாளவனுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் பானை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற கேட்டுக் கொண்டார். இதில் தி.மு.க., காங்., தே.மு.தி.க., வி.சி., கட்சி சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.