'ஸ்கூட்டி டிக்கி'யில் இருந்து ரூ.22 லட்சம் பறிமுதல்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து தீர்த்தமலை செல்லும் சாலையில், அம்பேத்கர் நகர் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் முன், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, அடையாளம் தெரியாத 20க்கும் மேற்பட்ட நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்ற தேர் தல் பறக்கும் படையினரை கண்டதும் அவர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அங்கு, சாவியுடன் ஸ்கூட்டி ஒன்று கேட்பாரற்று நின்றிருந்தது. தேர்தல் பறக்கும் படையினர், ஸ்கூட்டியின் டிக்கியை திறந்து பார்த்தனர். அதில், 22.03 லட்சம் ரூபாய், 500 ரூபாய் கட்டுகளாக இருந்தன. அதை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர், அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் செம்மலையிடம் ஒப்படைத்தனர். மேலும், ஸ்கூட்டியையும் கைப்பற்றி, ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
'வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, இந்த பணம் கொண்டு வரப்பட்டிருக்கலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
படித்தவனுக்கு மதிப்பில்லை; நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு; பிரசாரத்தில் சீமான் ஆவேசம்
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து; உரிமையாளர் கோர்ட்டில் சரண்
-
நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக.,
-
இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்
-
உண்மை உறங்காது; நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி; இபிஎஸ்