பெண்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்த தி.மு.க.,
-துஹின் ஏ சின்ஹா
எழுத்தாளர் மற்றும் பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர்
அரசியலில் திட்டமிட்ட சீர்திருத்தம் என்பது மிகவும் அபூர்வமாகவே நடைபெறும். அதுபோன்ற நல்ல வாய்ப்புகள், பல தலைமுறைகளுக்கும் மாற்றங்களை ஏற்படுத்தித் தரும். நம் நாட்டில் அதுபோன்று தானாக வந்த ஒரு நல்ல வாய்ப்பை, தி.மு.க., தன் அரசியல் காரணங்களால் எதிர்த்து, தமிழக பெண்களின் எதிர்பார்ப்புகளை மீண்டும் ஏக்கமாகவே மாற்றியுள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் அத்துடன் மிகவும் தெளிவான, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத தொகுதி மறுவரையறைக்கான மசோதாக்கள் பார்லிமென்டில் தாக்கல் செய்தபோது, அதன் நோக்கங்கள், எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள்.
அரசியலில் புதிய ரத்தத்தை பாய்ச்சக்கூடிய வாய்ப்புகளை, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அரசியல் என்ற ஒற்றை காரணத்துக்காக எதிர்ப்பு தெரிவித்து தோல்வியடைய செய்து விட்டன.
தப்புக்கணக்கு
இதன் வாயிலாக, தமிழகத்துக்கும் தமிழக பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய மிகப் பெரும் வாய்ப்புகளுக்கு, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., முட்டுக்கட்டையாக இருந்துள்ளது.
இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தி.மு.க., கூறும் காரணம், தமிழகத்தின் நலன் பறிக்கப்படும்; தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதுதான்.
ஆனால், மசோதாவில் கூறப்பட்டுள்ள கணக்குகளை தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை, அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை.
தற்போது நிராகரிக்கப்பட்ட மசோதாவில், மா நிலங்களுக்கு எவ்வித பாகுபாடும் இல்லாமல், தலா, 5-0 சதவீத லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இது உண்மையில், தமிழகத்துக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம்.
ஏற்கனவே நிறைவேறிய சட்டத்தின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன்பின், தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகத்துக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறையவே அதிக வாய்ப்பு உள்ளது.
மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தாங்கள் பழிவாங்கப்படுவதாக கூறிவரும் தி .மு.க., அரசு, உண்மையில், தற்போது கிடைத்த நல்ல வாய்ப்பை தன் அரசியலுக்காக இழக்கத் துணிந்துவிட்டது. இதன் மூலம், அரசியலில் தங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ள தமிழக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏக்கத்தையே கொடுத்துள்ளது.
தி.மு.க., போன்ற கட்சிகளில், அரசியல் என்பது பொதுவாக, மாவட்டம் மற்றும் பிற நிலைகளில், குடும்பங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
புது ரத்தம்
தந்தைக்கு பின் மகன், அதன்பின் பேரன் என்று, அந்தக் குடும்பங்களே, அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்களில் போட்டியிட முடியும். கட்சிக்காக உண்மையாக உழைக்கும் தொண்டர்கள், கூட்டங்களில் பங்கேற்பதற்கும், போராட்டங்கள் நடத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர்.
தற்போது இவர்களால் நிராகரிக்கப்பட்ட மசோதா என்பது, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை, மாறாக தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்த்தி இருக்கும். இவ்வாறு உயர்த்தப் பட்டிருந்தால், குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்ட பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும்.
இது, இளைஞர்களையும், பெண்களையும் அர சியலுக்கு ஈர்த்திருக்கும். இதன் வாயிலாக அரசியலில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு, நாட்டுக்கும் பலன் கிடைத்திருக்கும் . ஆனால், வீட்டுக்கு வந்த மகாலட்சுமியை, தன் அரசியல் என்ற காரணத்திற்காக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விரட்டி அடித்துள்ளன.
தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை, தமிழக பெண்களும், இளைஞர்களும் மன்னிக்கவும் மாட்டார்கள்; மறக்கவும் மாட் டார்கள்.
2013 லேயே நுறைவேறிய மசிதாவை அமல் படுத்தல.இப்போ நாடாளுமன்ற தொகுதி விரிவாக்கம் செய்து பெண்களுக்கு விநியோகிப்பாங்களாம். உ.பி, குஜராதல்தான் செல்லுபடியாகும் இந்த காமெடி. செம காமெடி.மேலும்
-
தாமதம் - கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில்- முல்லைப் பெரியாற்றில் கலக்கும் கழிவு நீரால் பாதிப்பு
-
பள்ளி ஆண்டு விழா
-
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், போலீசாருக்கு பணிஒதுக்கீடு
-
விடுதி வசதியுடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி: உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமார் உறுதி
-
தேர்தலுக்கு கட்சி கொடி கட்டாத முன்மாதிரி கிராமம் :45 ஆண்டுகளாக கிராமத்தில் தொடரும் கட்டுப்பாடு
-
அவதுாறு பிரசாரம் செய்த 'வாட்ஸ் அப் குரூப்' மீது வழக்கு