சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஆறு மணி நேரம் விஜய் 'ரோடு ஷோ'

1

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னைக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில், த.வெ.க., தலைவர் விஜய், நேற்று 'ரோடு ஷோ' நடத்தி, ஓட்டு சேகரித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல், நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, அக்கட்சி தலைவர் விஜய், நேற்று சென்னை பனையூரில் உள்ள, தன் வீட்டில் இருந்து, சாலை மார்க்கமாக, திருவள்ளூர் சென்றார்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி சந்திப்பில் உள்ள சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஒரு கிலோ மீட்டர் துாரம் ரோடு ஷோ சென்றார். வண்டலுார் வெளிவட்ட சாலையில் உள்ள சுங்க சாவடி, செங்குன்றம் அருகே உள்ள சுங்க சாவடி உள்ளிட்டவற்றில் தொண்டர்கள் குவிந்ததால், குறித்த நேரத்தில் விஜய் வர முடியாமல் போனது.
Latest Tamil News
கூட்டம் அதிகரித்ததால், தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு விஜய் சென்ற பிறகு, போக்குவரத்து தொடங்கியது. ரோடு ஷோ'வின் போது, புதிதாக திருமணமான ஜோடியை, தன் வாகனத்தில் ஏற்றி, விஜய் வாழ்த்தினார்.

நேற்று ஒரே நாளில், பொன்னேரி, மாதவரம், ஆர்.கே.நகர், கொளத்துார், வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளில், 'ரோடு ஷோ' நடத்தினார். ஆறு மணி நேரத்துக்கு மேலாக நடந்த, விஜயின் 'ரோடு ஷோ' பிரசாரத்தில், வழி நெடுக, த.வெ.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசார வாகனத்தை சூழ்ந்து கொண்டு, கட்சி துண்டுகளையும், பூக்களையும் துாக்கி வீசினர். எந்த இடத்திலும் விஜய் பேசவில்லை. இதனால், பல மணி நேரம் காத்திருந்த, த.வெ.க.,வினர் ஏமாற்றம் அடைந்தனர். விஜய்க்காக, வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த, 10க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.
Latest Tamil News
@block_B@ தடுமாறிய விஜய்; முழங்கையில் அடி

விஜய் நேற்று நடத்திய, 'ரோடு ஷோ'வில், சென்னை விருகம்பாக்கம் பகுதியில், வாகனத்தில் இருந்தபடி தொண்டர்களை நோக்கி கையசைத்தார். பின், வாகனத்தினுள், கீழே இறங்கியபோது, தடுமாறி விழுந்தார். இதில், விஜயின் முழங்கையில் அடிபட்டது.

தொடர்ந்து, ரோடு ஷோ மேற்கொண்டபோது, தொண்டர் ஒருவர் முழு தர்பூசணியை, வாகனத்தை நோக்கி வீசினார். அந்த தர்பூசணி வாகனத்தின் மேல் விழுந்து சிதறியது; விஜய் மீதும் தெறித்தது. இதனால், டென்ஷனான விஜய், அந்த தொண்டரை கண்டித்தார்.block_B

Advertisement