ஓட்டு சேகரிப்பின் போது கைகலப்பு :ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

கோத்தகிரி: கோத்தகிரி டானிங்டன் பகுதியில், சமீபத்தில் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க., வை சேர்ந்த சிவாஜி, தி.மு.க., வேட்பாளர் ராஜூவுக்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது, அவர் அ.தி.மு.க., வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., சாந்திராமுவை தரக்குறைவாக பேசி ஓட்டு சேகரித்துளதாக கூறப்படுறது. இதனால், ஆத்திரமடைந்த அ.தி.மு.க., வினர் சிவாஜியை தாக்கியுள்ளனர். காயம் அடைந்த அவர் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக னுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.

அத்துடன், அ.தி.மு.க., நகர செயலாளர் நஞ்சு சுப்ரமணி, ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் சிவாஜி ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement