ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி தொகுதி வாரியாக போலீசாருக்கு பணி ஒதுக்கீடு
தேனி:தேனி ஆயுதப்படை மைதானத்தில் மண்டல வாரியாக ஓட்டுப்பதிவு இயந்தரிங்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு, பாதுகாப்பு போலீசார் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 தொகுதிகளில் தாலுகா அலுவலகங்களில் இருந்து ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவுக்கான பொருட்களை அனுப்புவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இப் பொருட்களை எடுத்து செல்ல தேனி ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்கள், அதன் டிரைவர்களின் ஆவணங்கள் போலீசாரால் சரிபார்க்கப்பட்டது. பின் ஆர்.டி.ஓ., தகுதிபெற்ற தேர்வு செய்யப்பட்ட 150 வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டது. வாகனங்களில் தொகுதியை குறிப்பிட்டு தேர்தல் பணி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அதனை தொடர்ந்து ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டு, சோதிக்கப்பட்டன.
சில ஜி.பி.எஸ்., கருவிகள் வேலை செய்யாததால் மாற்று ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டன.இதேபோல் ஜி.பி.எஸ்., கருவி பொருத்திய வாகனங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் பணிக்கு ஓய்வு ராணுவ வீரர்கள், ஓய்வு போலீசார், ஊர்க்காவல்படையினரின் தொகுதி வாரியாக பணி ஒதுக்கப்பட்டன. இந்த குழு நாளை தாலுகா அலுவலகங்களில் இருந்து ஓட்டுப்பெட்டிகளுடன் ஓட்டுச்சாவடிகளுக்கு செல்வார்கள்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு