தபால் ஓட்டளிக்க போலீசார் தவிப்பு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தொகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த வெளியூர்களில் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு தபால் ஓட்டளிக்க முடியாமல் தவித்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,23ல் நடக்கும் நிலையில் போலீசார், ஊர்க்காவல் படை மற்றும் முக்கிய பணிகளுக்கு செல்லும் அலுவலர்கள் தபால் ஓட்டுகள் செலுத்தி உள்ளனர். முதுகுளத்துார் தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த போலீசார் சென்னையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் பலரும் பணி புரிகின்றனர். இந்நிலையில் தபால் ஓட்டளிக்க சென்ற நிலையில் தங்களது பெயர்கள் இல்லை என பல போலீசாருக்கு தபால் ஓட்டு வழங்கப்படவில்லை.

இதனால் டி.நகர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வரும் முதுகுளத்துார் தொகுதிக்கு உட்பட்ட போலீசார் தபால் ஓட்டு அளிக்கப்படாததால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது பணியில் ஈடுபட்டு வருவதால் நேரில் சென்று ஓட்டளிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதுகுறித்து ஆய்வு செய்து பணியில் இருக்கும் போலீசாருக்கு தபால் ஓட்டளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement