மக்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்: அனகை முருகேசன்
பல்லாவரம்: பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் அனகை முருகேசன், தி.மு.க., - காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன், கடைசி நாளான நேற்று, தொகுதி முழுதும் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முழு நேர பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, எப்போது வந்தாலும் மக்களை சந்தித்து, அவர்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும்.
மற்ற வேட்பாளர்கள் போல் நான் இல்லை. எந்த நேரத்திலும், நேரில் வந்து என்னை சந்திக்கலாம். நீங்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.
குற்றங்களை தடுக்க, தொகுதி முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். அரசு பள்ளிகளில் தேவையான வசதிகள் செய்யப்படும்.
பல்லாவரம் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் கட்ட விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பூங்கா அல்லது வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பிரசாரத்தின் போது, பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளர் மகாதேவன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு