கத்தி முனையில் ரூ.60,000 பறித்த மூன்று பேர் கைது
சென்னை: தேனாம்பேட்டையில், சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்த மூவரிடம் கத்தி முனையில் 60,000 ரூபாய் பறித்து சென்ற மூவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார், 34. நண்பர்கள் சுரேந்தர், கவுதம் ஆகியோருடன் தேனாம்பேட்டை ஸ்ரீசாய் கிளினிக் அருகே, கடந்த, 19ம் தேதி இரவு பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நால்வர், மூவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 'ஜிபே' செயலி வாயிலாக 10,300 ரூபாயும், கிரெடிட் அட்டையில் இருந்து 50,000 ரூபாயும் பறித்துச் சென்றனர்.
வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், தேனாம்பேட்டையைச் சேர்ந்த சதீஷ், 25, சந்திரன், 23, செல்வகுமார், 28, ஆகியோர், பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 59,000 ரூபாய் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான மற்றொருவரை, தேடி வருகின்றனர்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு