தொகுதி வளர்ச்சிக்கு மீண்டும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்: செந்தமிழன்
சைதாப்பேட்டை: அ.ம.மு.க., வேட்பாளர் செந்தமிழன், சைதாப்பேட்டை தொகுதியில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2006, 2011ல் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது கொண்டு வந்த திட்டங்களை தான், இன்று வரை தொகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
மொத்தம் 3,600 பேருக்கு பட்டா வாங்கி கொடுத்தேன். அப்போது மக்கள் செழிப்பாக இருந்தனர். அடுத்த 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் எதுவும் செய்யவில்லை.
அடையாறு ஆற்றை ஒட்டி, எந்த மேம்பாட்டு பணியும் செய்யவில்லை. இங்குள்ள மக்களை, துயரத்திற்கு ஆளாக்கி உள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அவரது தொகுதி மக்களுக்கான சுகாதாரத்தை கூட செய்து கொடுக்கவில்லை. குப்பை, கொசு, காய்ச்சலால் மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுகாதாரமான குடிநீரை கூட வழங்கவில்லை. மீண்டும் சுப்பிரமணியன் வெற்றி பெற்றால், தொகுதி மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும். தொகுதியை வளர்ச்சி பாதையில் எடுத்துச்செல்ல, குக்கர் சின்னத்தில் ஓட்டளித்து, மீண்டும் என்னை வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின்போது, அ.தி.மு.க.வில் மோகன், கதிர்முருகன், ஷேக் அலி, பா.ஜ.,வில் காளிதாஸ், பா.ம.க.,வில் திலகர், கோபி, புரட்சி பாரதம் கட்சியில் ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை
-
கஞ்சா கடத்தல் முக்கிய குற்றவாளி ஆறு ஆண்டுகளுக்கு பின் கைது