வரும் 1ல் 'மெட்ரோ' பயணியர் அட்டை சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம்
சென்னை:'மெட்ரோ ரயில் பயணியர் அட்டை, வரும் 1ம் தேதி முதல் சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றப்படுகிறது' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அறிக்கை:
மெட்ரோ ரயில்களில் பயணிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக, 2023 ஏப்., 14ம் தேதி சிங்கார சென்னை அட்டையை அறிமுகம் செய்யப்பட்டது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்படி, நாடு முழுதும் உள்ள பொது போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், வரும் 1ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 'சிங்கார சென்னை அட்டை'க்கு முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
எனவே, மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணியர் தங்கள் பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை மாற்றம் செய்ய வேண்டும்.
அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி வாயிலாக பெறப்படும் கியூ.ஆர்., 'ஸ்டோர் வேலியூ' பாஸ் அல்லது சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு