மாதா கோவில் திருவிழா அன்னதானம் வழங்கல்
கீழே சேர்க்கவும்: புதுச்சேரி: வில்லியனுார் லுார்து மாதா ஆலயத்தின் 149ம் ஆண்டு திருவிழாவில், லுாயி கண்ணையா குடும்பத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி மாநில தி.மு.க., மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் இந்த அன்னதான நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என, 2,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
திருவிழா காலங்களில் ஆலயத்திற்கு வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் பக்தர்களின் பசியைப் போக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த தொண்டு செய்யப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் லுாயி கண்ணையா குடும்பத்தினர், தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
Advertisement
Advertisement