சாலை ஆக்கிரமிப்பு வாகன ஓட்டிகள் அவதி
புதுச்சேரி: புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா அருகில் சாலை ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
புதுச்சேரி நகரின் முக்கியப் போக்குவரத்து வழித்தடமான மறைமலை அடிகள் சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த சாலையில் தாவரவியல் பூங்கா அருகில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், பிரதான சாலையின் அகலம் குறைந்துள்ளது.
சாலையின் ஓரத்தில் தள்ளுவண்டிகள், பழக்கடைகள் மற்றும் தற்காலிகக் கடைகள் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்கள், தங்களின் வாகனங்களைச் சாலையிலேயே தாறுமாறாக நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால், பஸ் மற்றும் லாரி போன்ற பெரிய வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
நெரிசலான நேரங்களில் ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்கள் கூடச் சிக்கிக் கொண்டு தவிக்கின்றன. மேலும், ஆக்கிரமிப்புகளால் பாதசாரிகள் சாலையின் நடுவே நடக்க வேண்டியிருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு