கணவருடன் பிரச்னை: மனைவி தற்கொலை

வில்லியனுார்: வில்லியனுார் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார், கோபாலனகடை அன்பு நகரை சேர்ந்தவர் மோகன் மகள் நித்யா, 22. இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், கல்லப்பட்டு கிராமத்தை சேர்ந்த உறவினர் ஜெயக்குமார், 25, என்பவருக்கும் கடத்த மூன்று வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இதற்கிடையில் கடந்த 13ம் தேதி நித்யா, தனது பெற்றோரை பார்ப்பதற்காக குழந்தையுடன், பிறந்த வீட்டிற்கு சென்று, அங்கேயே தங்கினார்.

கடந்த 20ம் தேதி மாமியார் வீட்டிற்கு சென்ற ஜெயக்குமார், மனைவி நித்யாவிடம் ஊருக்கு வருமாறு அழைத்தார். நித்யா வராததால், குழந்தையை மட்டும் துாக்கிக் கொண்டு, ஊருக்கு சென்றார்.

இதனால் வேதனையடைந்த நிதயா, வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து நித்யாவின் தந்தை மோகன், வில்லியனுார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement