சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் செழியன் பைக் பேரணியாக, நடந்து சென்றும் இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.
ரிஷிவந்தியம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் செழியன் இறுதி கட்ட பிரசாரம் செய்து பேசியதாவது; தொகுதியில் பிரசாரத்தின் போது அனைத்து கிராம மக்களும் ஏதேனும் ஒரு பிரச்னை கூறி, நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர். இதில் பெரும்பாலான கோரிக்கைகள் சுத்தமான குடிநீர் வேண்டும், தார், சிமெண்ட் சாலை, பஸ் வசதி இல்லை, கழிவுநீர் கால்வாய், பட்டா, அரசு வீடு தேவை என்பது தான். மக்களின் அடிப்படை வசதிகளை கூட இந்த தொகுதி எம்.எல்.ஏ., நிறைவேற்றாமல், தரமற்ற ஒப்பந்த பணிகளை செய்து பணத்தை சம்பாதித்துள்ளார். மாம்பழம் சின்னத்தை வரையவிடாமல் இடையூறு செய்து, அடக்குமுறைகளை மேற்கொண்டார்.
வேட்பாளரான எனக்கு இவ்வளவு குடைச்சல் என்றால், கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் நிலையை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. தேர்தலில் நான் வெற்றி பெற்றதும் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊரில் தங்கி மக்களின் குறைகளை நிறைவேற்றுவேன். அரசியலை சேவையாக பார்ப்பதால், மக்களிடம் லஞ்சம் பெற மாட்டேன். தி.மு.க., வால் முடக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., அரசின் நலத்திட்ட பணிகள் மீண்டும் தொடர மாம்பழம் சின்னத்தில் ஓட்டளித்து, வெற்றி பெற செய்யுங்கள் என பேசினார்.
மேலும்
-
ராகுல் பிரசாரம் மொழிபெயர்ப்பு குழப்பம்; பின்னணியில் இருப்பது நிவேதித் ஆல்வா
-
சர்க்கரை ஆலைகளுக்கு புதிய சட்டம்: மே 20 வரை கருத்து தெரிவிக்கலாம்
-
இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்கள் பயணம் துப்பாக்கி போலீஸ் கட்டுப்பாட்டில் மையங்கள்
-
தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் விடுமுறை கடந்த 20ல் ரூ.13 கோடிக்கு மது விற்பனை
-
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் உயர்கல்வி வேலைவாய்ப்பு நிகழ்ச்சி
-
டில்லியில் சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப மாநாடு