டில்லியில் சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப மாநாடு

சென்னை: டில்லியில். சென்னை ஐ.ஐ.டி., சார்பில் தொழில்நுட்ப மாநாடு, மே 5ம் தேதி நடக்கிறது. இதில், பங்கேற்க, தொழில் நிறுவனங்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ஐ.ஐ.டி., தொழில்துறை - கல்வித்துறை - அரசு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, 'வளர்ச்சி அடைந்த பாரதம்-2047' எனும் பயணத்தை விரைவுப்படுத்த திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், தலைநகர் டில்லியில், வரும் மே 5ம் தேதி, 'சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து, பாரதத்துக்காக இணைந்து பாடுபடுவோம்' எனும் கருப்பொருளுடன், தொழில்நுட்ப மாநாடு நடக்கிறது.

நிலையான வளர்ச்சி, புதி ய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை ஊக்குவிக்க, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். தொழில் துறையின் ஆதரவுடன், மேற்கொள்ளப்படும் அதிநவீன ஆராய்ச்சிகள், எப்படி உலகம் முழுதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து, இந்த மாநாடு தெளிவுப்படுத்தும். இந்த மாநாட்டில், பங்கேற்க https://sociity.in என்ற இணையதளத்தில் வரும் மே 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement