தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் விடுமுறை கடந்த 20ல் ரூ.13 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடப்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்க, கடந்த 21, 22, 23 ஆகிய, 3 நாட்கள் மது விற்பனை இல்லாத நாளாக கடைப்பிடிக்க, டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், எப்.எல்.2, 3, 4 உள்ளிட்ட அனைத்து மது விற்பனை கூடங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நேரம் என்பதுடன், 3 நாட்கள் மது விற்பனை நடக்காது என்பதால், கடந்த, 20ல் இம்மாவட்டத்தில் உள்ள, 183 டாஸ்மாக் கடைகளில் மட்டும், 13 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையானது. வழக்கமான நாட்களில் 5 முதல், 6 கோடி ரூபாய்க்கும், சனி, ஞாயிறு போன்ற வார விடுமுறை, மாத முதல் தேதி, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில், 8 கோடி ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனையாகும். கடந்த, 20ல் ஒரு மடங்கு அதிகமாக, 13 கோடி ரூபாய்க்கு ஒரே நாளில் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

Advertisement