இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்கள் பயணம் துப்பாக்கி போலீஸ் கட்டுப்பாட்டில் மையங்கள்
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில், 8 சட்டசபை தொகுதிகளில், 2,379 ஓட்டுச்சாவடிகளுக்கும்
நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து, மின்னணு
ஓட்டுப்பதிவு இயந்திரம் (இ.வி.எம்.,) உள்ளிட்ட இயந்திரங்கள், பயன்பாட்டு
பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.
ஒவ்வொரு லாரியிலும், 6
முதல், 8 ஓட்டுச்சாவடிகளுக்கான இயந்திரங்கள், பயன்பாட்டு பொருட்கள், 86
கொண்ட சாக்கு பை, குப்பை கூடை ஆகியவை ஏற்றப்பட்டன. மண்டல அலுவலர்கள்,
ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் ஆகியோர் லாரிகளின் பின் காரில் சென்று,
ஓட்டுச்சாவடிகளில் அவற்றை பத்திரமாக வைத்து, பாதுகாப்பை உறுதி செய்தனர்.
இவர்களுடன் உள்ளூர் போலீஸ், துணை ராணுவத்தினர் துப்பாக்கியுடன்
பயணித்தனர். இந்த வாகனங்கள் அனைத்திலும் ஜி.பி.எஸ்.,
பொருத்தப்பட்டுள்ளதால், அவற்றை கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணித்தனர்.
ஓட்டுச்சாவடிகளில்
மண்டல அலுவலர்கள், இயந்திரம் உள்ளிட்டவைகளை ஒப்படைத்ததும், தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விபரம் தாக்கல் செய்தனர். இ.வி.எம்., உள்ளிட்ட
இயந்திரங்கள் வரத்தானதும், அந்தந்த ஓட்டுச்சாவடி மையத்தை துணை
ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அறைகளில்
வைக்கப்பட்ட இயந்திரங்களுக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் உள்ளூர்
போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
அதன் பின், அம்மையத்துக்கு வரும்
அனைத்து அதிகாரிகளின் வருகை பதிவு செய்து, கடும் சோதனைக்கு பின்னரே,
ஓட்டுச்சாவடி மையத்துக்குள் அனுமதித்து வருகின்றனர்.
/பாக்ஸ் - 6 காலம்/
----------------------------------------------
தொகுதி பெயர் - வேட்பாளர்கள் - ஓட்டுச்சாவடிகள்-பேலட் யூனிட் - கட்டுப்பாட்டு இயந்திரம் - வி.வி.பேட்
------------------------------------------------
ஈரோடு கிழக்கு - 20 259 620 310 336
ஈரோடு மேற்கு 13 325 390 390 422
மொடக்குறிச்சி 14 290 348 348 377
பெருந்துறை 13 292 350 350 379
பவானி 14 306 367 367 397
அந்தியூர் 14 271 325 325 352
கோபி 18 309 740 370 401
பவானிசாகர் 12 327 392 392 425
மொத்தம் 118 2,379 2,852 3,532 3,089
----------------------------------------------
இந்த
இயந்திரங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக, 20 சதவீதம்
இ.வி.எம்.,கள், 20 சதவீதம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 30 சதவீதம்
வி.வி.பேட் ஆகியவை உள்ளன.
மேலும், இந்த இயந்திரங்களின் பேட்டரிகளில் சில
உரிய நேரத்துக்கு பயன்படுத்த இயலாததாக உள்ளதாக புகார் எழுந்தது. இதுபற்றி,
ஈரோடு கலெக்டர் கந்தசாமி, பெங்களுரு பெல் நிறுவனத்துக்கு அளித்த தகவலின்
பேரில், 360 புதிய பேட்டரிகள் வரத்தாகி உள்ளது. இவை அந்தந்த பகுதி மண்டல
அலுவலர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, பேட்டரி பழுது ஏற்பட்டால், உடனடியாக
மாற்றும் வகையில் முன்னேற்பாடு செய்துள்ளனர்.
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை