சர்க்கரை ஆலைகளுக்கு புதிய சட்டம்: மே 20 வரை கருத்து தெரிவிக்கலாம்

புதுடில்லி: சர்க்கரை ஆலைகளுக்கு, 'கரும்பு கட்டுப்பாட்டு ஆணை 2026' என்ற புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து ள்ளது.

இதுகுறித்து மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 1966ல் கொண்டு வரப்பட்ட கரும்பு கட்டுப்பாட்டு ஆணை 1966 சட்டத்துக்கு பதிலாக, இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பழைய சட்டத்தின் அடிப்படை அமைப்புகள் அப்படியே தொடரும். அதாவது நியாயமான மற்றும் ஊக்கத்தொகை விலை விதிகள், கரும்பு நகர்வு கட்டுப்பாடுகள், 14 நாட்களுக்குள் பணம் செலுத்தும் அவகாசம், தாமதமான கட்டணங்களுக்கு ஆண்டுக்கு 15% வட்டி போன்றவை அப்படியே தொடரும்.

எத்தனால் உற்பத்தி, டிஜிட்டல் செயல்பாடு, ஆலை அனுமதி உள்ளிட்ட பல மாற்றங்கள் இந்த ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, புதிய நிர்வாக கட்டமைப்பையும் அறிமுகப்படுத்துகிறது.

இது குறித்து, மே 20 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

Advertisement