ராயபுரம் தொகுதியை மேம்படுத்த திட்டங்களை அறிவித்தார் ஜெயகுமார்

ராயபுரம்: அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயகுமார், ராயபுரம் தொகுதியில் நேற்று, இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். தன்னை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்தால், தொகுதியில் நிறைவேற்றப்போகும் திட்டங்களை, வாக்குறுதிகளாக அளித்துள்ளார்.

அவரது வாக்குறுதிகள்:

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான வீடு, வாரத்திற்கு ஏழு நாட்களிலும் குடிநீர் வழங்கப்படும். சுத்திகரிப்பு மையத்தில் இலவச குடிநீர் வழங்கப்படும்.

குப்பை கழிவுகளை தினமும் அகற்றி, குப்பை இல்லாத தொகுதியாக ராயபுரம் மாற்றப்படும். மீனவர்கள் மேம்பாடிற்காக தனி அமைப்பு உருவாக்கப்படும்.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அரசு போட்டி தேர்வு மாணவ - மாணவியருக்கு இலவச பயிற்சி முகாம் நடத்தப்படும். சுய தொழில் புரிவோருக்கு ஐந்து லட்சம் வரை நிதி வழங்கப்படும்.

பெண்களுக்கு மாதம் 10,000 ஆயிரம் உதவித்தொகை, மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கப்படும். புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்கப்படும்.

நுாறு நாட்கள் 100 சாலை திட்டம், பாதாள சாக்கடை திட்டம், முழுமையான மழைநீர் வடிகால்வாய், குடிநீர் குழாய் மேம்பாடு ஆகியவற்றை நிறைவேற்றுவேன்.

இளைஞர்களுக்கு ஐ.டி., மற்றும் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். பெண்களுக்கு சிறு தொழில் உதவி செய்யப்படும். குடிசை மாற்று வீடுகளில் வசிப்போருக்கு, குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கப்படும்.

பழைய அனுபவத்தின் வாயிலாக புதிய வளர்ச்சியை ஏற்படுத்துவேன்; ராயபுரத்தில் மாற்றம் ஏற்படுத்துவேன். இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு ஜெயகுமார் வாக்குறுதி அளித்துள்ளார்.

Advertisement