மயங்கி விழுந்து கவுன்சிலர் பலி
மதுரை: மதுரை மேலப்பனங்காடி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் குமரவேல் 61. மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினராகவும், மாநகராட்சி 23வது வார்டு கவுன்சிலராகவும் இருந்தார்.
ஏப்ரல் 26 மாலை 6:30 மணிக்கு செல்லுாரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு டூவீலரில் சென்றார். எஸ்.ஆலங்குளம் அருகே சென்றபோது மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வெயிலின் தாக்கமா அல்லது மாரடைப்பு காரணமா என தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement