பிரசாரத்தில் சீமான் முதலிடம்!

5

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், அதிக இடங்களில் பிரசாரம் செய்த தலைவர்கள் பட்டியலில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல், நாளை நடக்க உள்ளது. இந்த தேர்தலில், திமுக - அதிமுக கூட்டணிகள், தவெக - நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான அறிவிப்பை மார்ச் 15ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்டது. மார்ச் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நாட்களில் அதிக இடங்களில் பிரசாரம் செய்த தலைவர்கள் பட்டியலில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 178 இடங்களில் பேசியுள்ளார்.

சீமானைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 123 இடங்களில் பிரசாரம் செய்தார். முதல்வர் ஸ்டாலின் 80 இடங்களிலும், தவெக தலைவர் நடிகர் விஜய் 14 இடங்களிலும் பிரசாரம் செய்து, இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

தலைவர்கள் பெயர் - பிரசாரத்தில் பேசிய இடங்கள்

சீமான் - 178

பழனிசாமி - 123

ஸ்டாலின் - 80

விஜய் - 14

Advertisement