விபத்தால் மனமுடைந்தவர் தற்கொலை

திருத்தணி: திருத்தணி அடுத்த ரெட்டிமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 50. இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் படுகாயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து, ஒரு மாதத்திற்கு பின் வீடு திரும்பினார். ஆறு மாதமாக ரமேஷ், உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்தவர், நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement