பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி

ஆர்.கே.பேட்டை: ஆட்டோ மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார்.

ஆர்.கே.பேட்டை அடுத்த கதனநகரம் காலனியைச் சேர்ந்தவர் அன்பரசு, 39. இவர் நேற்று, உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அம்மையார்குப்பம் அரசு மருத்துவமனை அருகே வந்த போது, எதிரே வந்த ஆட்டோ இருசக்க வாகனம் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அன்பரசு, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், ராணிப்பேட்டை சி.எம்.சி., மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement