கேள்விக்குறியான ஓட்டுச்சாவடி பாதுகாப்பு ;‛குடி' மகன்கள் அட்டூழியம்

திண்டுக்கல்:தேர்தல் பணியில் உள்ள நுண் பார்வையாளர்கள் கண்காணிக்க தவறியதால் திண்டுக்கல் மாநகராட்சி கென்னடி நினைவு மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி யொட்டி பீர்பாட்டில்கள் பரவிக்கிடக்க ஓட்டுச்சாவடியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

திண்டுக்கல் ஓய்.எம்.ஆர்., பட்டி கென்னடி நினைவு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடி வளாகம் சுகாதாரம், பாதுகாப்பு குறித்து மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்து பிரச்னைகள் இருந்தால் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் அளித்து ஓட்டுப்பதிவு அலுவலர்கள், ஓட்டுச்சாவடியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் ஓட்டுச்சாவடி அமைந்துள்ள மாநகராட்சி கென்னடி நினைவு தொடக்கபள்ளி வளாகத்தில் குடிமகன்கள் மது குடித்துவிட்டு பீர்பாட்டில்களை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். மேலும் இங்குள்ள கழிப்பறை முறையாக பராமரிக்காமல் உள்ளதாகவும் புகார் உள்ளது. இங்குள்ள ஓட்டுச்சாவடி சுகாதாரம், பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்காளர்கள் தெரிவித்தனர்.

Advertisement