உங்களை நம்பி இந்த தேர்தலில் நிற்கிறேன்: வடலுாரில் வேல்முருகன் உருக்கம்
வடலுார்: குறிஞ்சிப்பாடி த.வா.க., வேட்பாளர் கண்ணனை ஆதரித்து, கேமரா சின்னத்திற்கு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வடலுாரில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் அங்கு பேசியதாவது:
உங்களை நம்பி இந்த தேர்தலில் நான் தனியாக நிற்கிறேன். ஆடம்பர வரவேற்பு என்பது மற்ற அரசியல் கட்சிகளின் கலாசாரம். அது நமக்கு தேவையில்லை.
பண்ருட்டியில் அரசு பொறியியல் கல்லூரியை நான் கொண்டு வந்துள்ளேன் ; பன்னீர்செல்வம் என்ன கொண்டு வந்தார்?
வடலுார், பெருவெளியை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்ய அவர் முயற்சி செய்கிறார். என்.எல்.சி.,யில் வட மாநிலத்தவருக்கு வேலை கொடுத்தது ஏன் என நான் கேள்வி கேட்கிறேன்.
என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்தோருக்காக சட்டசபையில் பேசி, நியாயமான தொகையை நான் வாங்கிக் கொடுப்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறேன்.
பன்னீர்செல்வத்திற்கு, 5 முறை வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். ஒரு விவசாய குடியில் பிறந்து, தனிக்கட்சி துவங்கி, தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளேன். அரசு வேலைக்கு என் மக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் ஏமாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு