மினி லாரி மோதி மூதாட்டி பலி
திருவள்ளூர்: மப்பேடு அருகே மினி லாரி மோதிய விபத்தில், சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடைச் சேர்ந்தவர் அலமேலு, 72. இவர், நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே வேகமாக வந்த மினி லாரி, மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி அன்றிரவே உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து, மினி லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
Advertisement
Advertisement