த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
சென்னை:தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க., கூட்டணி கட்சியினர், த.வெ.க., தலைவர் விஜயை பார்த்ததும், உற்சாகமடைந்து கொண்டாடிய 'வீடியோ' மிக வேகமாக பரவி வருகிறது.
இறுதி கட்ட பிரசாரத்தை, த.வெ.க., தலைவர் விஜய், நேற்று சென்னை நந்தனத்தில் மேற்கொண்டார். பின், பிரசார வாகனத்தில், அவர் நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு திரும்பியபோது, வழியில், சோழிங்கநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட, பாலவாக்கம் பகுதியில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து விடக்கூடாது என நினைத்து, முன் இருக்கையில் இருந்து, பின் இருக்கைக்கு விஜய் மாறினார். ஆனால், தி.மு.க., கூட்டணி கட்சியினர், விஜய் வாகனத்தை நோக்கி, உற்சாகமாக ஓடி வந்தனர். இதனால், மீண்டும் முன் இருக்கைக்கு வந்தார். விஜயை பார்த்த மகிழ்ச்சியில், 'செல்பி' எடுக்க, அவரது வாகனத்தை நோக்கி சிலர் பாய்ந்தனர்.
தங்களிடமிருந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடியை பிடித்தபடி, விஜயை நோக்கி கை அசைத்தனர். இளைஞர் ஒருவர் முதல்வர் ஸ்டாலின் படத்தை காண்பித்தார். பலர் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து ஓடவும் சென்றனர். இது தொடர்பான வீடியோவை, த.வெ.க.,வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
***
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை