'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை முடித்து வைத்து அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேசியதாவது:

அ.தி.மு.க.,வும் அ.ம.மு.க.,வும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். நட்பு கரத்தோடு நம் ஒருங்கிணைப்பை பா.ஜ., மேற்பார்வையிட்டு வருகிறது. தீய சக்தி தி.மு.க.,வை தேசிய ஜனநாயகக் கூட்டணியால் வீழ்த்த முடியும் என மக்கள் நம்புகின்றனர். சட்ட விரோத தொழிலுக்கு தி.மு.க., துணையாக இருக்கிறது.

முன்பு பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று திரும்பும் வரை பெற்றோர் பதட்டத்தில் இருப்பார்கள். இப்போது ஆண் குழந்தைகள் பள்ளி சென்று போதைப்பொருளில் சிக்காமல் வர வேண்டும் என்று பதட்டத்தில் இருக்கின்றனர்.

பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை செய்வதில் தி.மு.க., நிர்வாகி சம்பந்தப்பட்டுள்ளார். மழை பெய்தாலும் பிரதமர் மோடி, வெயில் அடித்தாலும் பிரதமர் மோடி அரசு என முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி கொடுத்துள்ளனர். ஒதுக்கப்பட்ட இந்நிதி எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றார்.

Advertisement