அமைச்சர் மீது அவதுாறு 3 பெண்கள் மீது வழக்கு
சேலம்: சேலம் வடக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளராக, அமைச்சர் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பொன்னம்மாபேட்டையில், மூன்று பெண்கள், நேற்று காலை 9:00 மணிக்கு வீடு வீடாக, அவதுாறு துண்டு பிரசுரத்தை வினியோகித்துள்ளனர்.
இதையறிந்த, அப்பகுதி தி.மு.க.,வினர் திரண்டு, பெண்களை பிடித்து விசாரித்ததில், உடையாப்பட்டியை சேர்ந்த பொற்கொடி, பொன்னம்மாபேட்டை வள்ளி, தனம் என, தெரிந்தது.
அவர்கள் வைத்திருந்த துண்டு பிரசுரங்களை பறிமுதல் செய்து, மூவரையும் அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, தி.மு.க.,வினர், சேலம் - கடலுார் நெடுஞ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, கட்சியினர் கூறுகையில், 'அமைச்சரின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள் சிலர், அவரை பழிவாங்க முடிவு செய்து, அரசியல் சூழ்ச்சியை கையாண்டு உள்ளனர்.
அமைச்சருக்கு எதிராக அவதுாறு துண்டு பிரசுரம் வினியோகிக்க காரணமான பா.ம.க.,வை சேர்ந்த இருவரை கைது செய்ய வேண்டும்' என்றனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், மறியலை கைவிட்டனர். பின், பொற்கொடி உட்பட மூன்று பெண்கள் மீது வழக்கு பதிந்த போலீசார், பா.ம.க.,வினர் குறித்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு