பிரசாரம் செய்த போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
துாத்துக்குடி: அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸ்காரர் சபரிகுமார், 37. இவர், காவலர்கள் குடியிருப்பு பகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து உள்ளார்.
இது தொடர்பாக, ஆதாரங்களுடன் எஸ்.பி., மதனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அது உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.
அரசு ஊழியர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படாமல் பணியாற்ற வேண்டும் என்பது விதிமுறை. அதை, போலீஸ்காரர் சபரிகுமார் மீறியதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement