ஆஸ்திரியாவுக்கு கடத்தப்பட இருந்த நேபாள பத்மபானி சிலை மீட்பு
பெங்களூரு: நேபாளத்தில் இருந்து ஆஸ்திரியாவுக்கு கடத்தப்பட இருந்த 9ம் நுாற்றாண்டை சேர்ந்த பத்மபானி சிலை, பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் மீட்கப்பட்டது.
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு பிரிவில் ஆஸ்திரியாவுக்கு செல்லும் பார்சலில், சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. பார்சலை திறந்து பார்த்தபோது, சிலை ஒன்று இருந்தது.
உடனடியாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள், கல்லை ஆய்வு செய்தபோது, ஒன்பதாம் நுாற்றாண்டின் நேபாளத்தின் பத்மபானி சிலை என்பதை உறுதிபடுத்தினர்.
உடன டியாக நேபாளத்தில் காத்மாண்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், 'இது எங்கள் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் சிலை. நேபாளத்தில் இருந்து கடத்தப்பட்டு உள்ளது' என்றனர்.
தற்போது சிலை சுங்க அதிகாரிகளின் வசத்தில் உள்ளது. இந்த சிலையை நேபாளத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை