மே 2ல் திறப்பு: 'ஹெலிபேட்' வசதியுடன் கட்டப்பட்டுள்ள முதல் அரசு மருத்துவமனை
பெங்களூரு: விக்டோரியா மருத்துவமனையில் ஏழு ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த புதிய 10 மாடிக் கட்டடம், மே 2ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. இதனால் 'ஹெலிபேட்' வசதியுடன் கட்டப்பட்டுள்ள முதல் அரசு மருத்துவமனை என்ற பெருமை கிடைக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் தினமும் பல ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனைகளில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையும் ஒன்று. வெளி நோயாளிகள் தவிர 885 படுக்கைகளில் உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.
சிகிச்சை பெறுவதற்காக புறநோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் கூடுதல் கட்டடம் கட்டி, மருத்துவ வசதியை மேம்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, 10 மாடிகள் கொண்ட புதிய வளாகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 68 கோடி ரூபாயை ஒதுக்கிய அப்போதைய முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, வளாகம் கட்டுவதற்கான அடிக்கல்லை, 2019 டிசம்பர் 11ல் நாட்டினார்.
கால தாமதம்
புதிய கட்டடம் 2021ல் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. கொரோனா தொற்றுப் பரவலால் பணியில் தொய்வு ஏற்பட்டது. அடுத்து ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் நிறுத்தப்பட்டன. கால தாமதம் காரணமாக திட்ட மதிப்பீடு உயர்ந்தது. அடுத்து வந்த அரசு, கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தது. இறுதியாக 90 கோடி ரூபாய் செலவில் 10 மாடிகள் கொண்ட வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தரைத்தளத்தையும் சேர்த்து மொத்தம் 11 தளங்கள் கொண்ட புதிய வளாகத்தில் பொது மருத்துவம், எலும்பியல், மருத்துவப் பரிசோதனை, அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. பொது அறுவைச் சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, பொது மருத்துவத்திற்கான பிரத்யேக புறநோயாளிகளுக்கான பதிவுகள் இந்த வளாகத்தின் கீழ் தளத்தில் செயல்படும். ஒருதளம், மிக முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியல் முக்கியப்பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் சிகிச்சை பெறுவதற்கு இங்கே சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கட்டட திட்டம் குறித்துக் கேட்டறிந்த மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சரணபிரகாஷ் ருத்ரப்பா பாட்டீல், ஒரு தளத்தை அவசர சிகிச்சைப் பிரிவுக்காக ஒதுக்கீடு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதிய வளாகத்தில் 1,000 படுக்கைகள் ஏற்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், மேலே இரண்டு மாடிகள் ஹெலிபேடுக்காக ஒதுக்கப்பட்டதால், படுக்கை எண்ணிக்கை 629ஆகக் குறைந்துள்ளது. அமைச்சரின் உத்தரவால் படுக்கை வசதி மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
*தீவிர சிகிச்சை
மற்ற வசதிகளைப் பாதிக்காமல் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விக்டோரியா மருத்துவமனையின் 125-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இதற்கு 'குவாஸ்குவிசென்டென்னியல் பிளாக்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இந்த பிளாக் வரும் மே 2ம் தேதி திறக்கப்பட உள்ளது. ''புதிய வளாகம் பயன்பாட்டுக்கு முழுமையாக வரும்போது, சிகிச்சைக்காக புறநோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறையும்,'' என, மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.
'ஜீவ ஸ்பந்தனா'
'குவாஸ்குவிசென்டென்னியல் பிளாக்'கில் மேலே இருக்கும் இரண்டு தளங்கள் ஹெலிபேட் அமைப்பதற்காகவும் அதுதொடர்பான நிர்வாக வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அவசர காலங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மனித உறுப்புகளை விரைவாகக் கொண்டு செல்ல இது பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'ஜீவ ஸ்பந்தனா' எனும் உறுப்பு மீட்பு மையத்துடன் இணைந்து இந்த ஹெலிபேட் செயல்படும்.
******
...பாக்ஸ்...
புதிய வளாகத்தின் சிறப்புகள்
* 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம்
* நோயாளிகளின் விபரம் டிஜிட்டல் பதிவு
* ஆன்லைன் டோக்கன் அறிமுகம்
* ஒரே இடத்தில் அனைத்துப் பரிசோதனைகள்
ஆட்சேர்ப்பு
படுக்கைகள், மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. செவிலியர்கள், குரூப் டி பணியாளர்கள், மனிதவளப் பணியாளர்கள், பிற பணியாளர்களின் ஆட்சேர்ப்பு நடந்து வருகிறது. இரண்டு தளங்களுக்கான உபகரணங்கள் ஏற்கனவே வந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் நடந்து வருகின்றன. பழைய கட்டடத்தில் உள்ள எலும்பியல் துறை புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும்.
டாக்டர் தீபக் எஸ்,
மருத்துவக் கண்காணிப்பாளர்
விக்டோரியா மருத்துவமனை
ஆட்சேர்ப்பு
படுக்கைகள், மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. செவிலியர்கள், குரூப் டி பணியாளர்கள், மனிதவளப் பணியாளர்கள், பிற பணியாளர்களின் ஆட்சேர்ப்பு நடந்து வருகிறது. இரண்டு தளங்களுக்கான உபகரணங்கள் ஏற்கனவே வந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் நடந்து வருகின்றன. பழைய கட்டடத்தில் உள்ள எலும்பியல் துறை புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும்.
டாக்டர் தீபக் எஸ்,
மருத்துவக் கண்காணிப்பாளர்
விக்டோரியா மருத்துவமனை
'குவாஸ்குவிசென்டென்னியல் பிளாக்'கில் மேலே இருக்கும் இரண்டு தளங்கள் ஹெலிபேட் அமைப்பதற்காகவும் அதுதொடர்பான நிர்வாக வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசர காலங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மனித உறுப்புகளை விரைவாக கொண்டு செல்ல இது பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'ஜீவ ஸ்பந்தனா' எனும் உறுப்பு மீட்பு மையத்துடன் இணைந்து இந்த ஹெலிபேட் செயல்படும்.
24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம்
நோயாளிகளின் விபரம் டிஜிட்டல் பதிவு
ஆன்லைன் டோக்கன் அறிமுகம்
ஒரே இடத்தில் அனைத்துப் பரிசோதனைகள்.
மேலும்
-
புதுச்சேரியில் 95.2 டிகிரி வெயில் சாலைகள் வெறிச்சோடின
-
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி அதிகரிக்கும்: ஆந்திர முதல்வர்
-
ஆதி சங்கரர் மற்றும் ராமானுஜர் ஜெயந்தி விழாவையொட்டி பாராயணம்
-
'தேர்தல் முடிவுக்கு பின் கட்சியை காப்பாற்ற மோடி, அமித் ஷா காலில் தி.மு.க., விழும்': விஜய்
-
மதுவிற்ற 7 பேர் கைது புதுச்சேரியில் போலீசார் அதிரடி
-
பி.ஒய் 01 டி.ஜி., வரிசை பேன்சி எண்கள் ஏலம்