மதுவிற்ற 7 பேர் கைது புதுச்சேரியில் போலீசார் அதிரடி
புதுச்சேரி: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து விதமான மதுபானங்கள் கடையை 3 நாட்கள் மூட கலால் துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவு நேற்று துவங்கி நாளை 23ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது.
அதன்படி புதுச்சேரியில் நேற்று காலை 10:00 மணி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று புதுச்சேரியில் கள்ளத்தனமாக மது விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதன்படி திருக்கனுாரில் மணலிப்பட்டை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், 29, என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 19 ஆயிரத்து 304 மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பாகூர், கொம்பந்தான்மேடு பகுதியில் மடுகரையை சேர்ந்த கார்த்தி, 28, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.3,020 மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேல்பரிக்கல் பட்டு பகுதியில் ர ஞ்சித், 25, சரபாலா, 28, ஆகியே இரண்டு பேரை போலீசார் கைது செய்து, ரூ. 1,130 மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் 1,750 ரொக்கம், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அரியாங்குப்பம் பகுதியில், சக்கரபாணி, 40, என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 32 லிட்டர் சாராயம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். வில்லியனுாரில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்த செந்தில், 40, என்பவரை போலீசார் கைது செய்தனர். உருளையன்பேட்டை பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்த குமார், 41, என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.3,370 மதிப்புள்ள மதுபானத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
-
திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி