'தேர்தல் முடிவுக்கு பின் கட்சியை காப்பாற்ற மோடி, அமித் ஷா காலில் தி.மு.க., விழும்': விஜய்

11

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், விஜய் பேசியதாவது:

எம்மதமும் நம் முகம் என்பதுதான் விஜயின் முகம். சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற, ஒரு பக்கம் காங்கிரசுடன் கூட்டு வைத்து, தி.மு.க., கதர் வேஷம் போடுகிறது; மறுபக்கம், பா.ஜ.,வுடன் மறைமுக கூட்டணி அமைத்து, காவி வேஷம் போடுகிறது.

தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும், ரகசிய தொடர்பு உள்ளது என, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சொன்னது, இன்று இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதை, இப்போது சொல்கிறார்.

தேர்தல் முடிவுக்கு பின், கட்சியை காப்பாற்ற, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காலில் தி.மு.க., நிச்சயம் விழும். பா.ஜ.,வின் முதல் அடிமை யார் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க.,இடையே போட்டி நடக்கிறது.

பிரச்னையென்றால் விஜய் வெளியே வரமாட்டார் என, 10 முறை தோற்றுப்போன பின்னும் திருந்தாத ஒருவர், சும்மா நசநசவென்று பேசுகிறார். அய்யா அனுபவசாலி, சேலத்தில் பதுங்கி கொள்ளாமல் வெளியே வந்து, ஒரு தொகுதியில் நின்று காட்டுங்கள். முதலில் அதை செய்துவிட்டு, பேசுங்க பாஸ். சொந்த தொகுதியான இடைப்பாடியில் தோற்றுப்போய் விடுமோ என பயந்துதான், என் சின்னத்தை திருடினீர்கள்.

தி.மு.க.,வுக்கும் அ.தி. மு.க.,வுக்கும் பா.ஜ., தான் ஓனர். பா.ஜ., அமைச்சர் ஒருவர், என்னை நடிகர் என்கிறார். நான் நடிகன் தான். ஆனால், நான் அரசியலில் நடிக்கவில்லை. தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டாலும் சுற்றி சுற்றி அது பா.ஜ.,வுக்குதான் போகும். கரூரில் நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்றால், அங்கு 20 ஆண்டாக போட்டி போட்ட உங்கள் அடிமையை ஏன் கோவைக்கு ஓட வைத்தீர்கள்?

மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கும் நாள். மண்டையை பிளக்கும் அந்த சூரியன் எப்படா ஒழியும் என மக்கள், அதை வெறுத்து ஒதுக்குவர். அப்படி தீயசக்தி தி.மு.க.,வை ஓட ஓட விரட்டி, முற்றுப்புள்ளி வைக்கும் மே 4ம் தேதி, நமக்கு ஸ்பெஷலான நாளாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

@block_Y@ அதிக நேரம்

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், மாலை 3:00 மணிக்கு விஜய் பேசுவதாக இருந்தது. வழக்கமாக நிகழ்ச்சிக்கு தாமதமாக வரும் விஜய், நேற்று 'ரோடு ஷோ 'முடிந்து, மதியம் 2:10 மணிக்கே வந்து விட்டார்; ஆனால், அரங்கம் நிரம்பவில்லை. எனவே, ஒரு மணி நேரம் காத்திருந்து, அரங்கம் நிரம்பிய பின், 3:15 மணிக்குதான் விஜய் பேசினார். அதேபோல், கட்சி துவங்கிய பின், விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டை தவிர, 20 நிமிடத்துக்கு மேல் விஜய், எங்குமே பேசியது இல்லை. ஆனால், நேற்று தேர்தல் பிரசாரத்தின் கடைசி கூட்டத்தில், முதல்முறையாக 32 நிமிடங்கள் விஜய் பேசினார்.block_Y

@block_B@ கீழே விழுந்தது அபசகுணமா?

பேசி முடித்த பின், விசிலை ஊதுவதற்காக, அதை விஜய் தனது கையில் எடுத்தார். ஆனால், கை தவறி விசில் கீழே விழுந்தது. தேர்தல் பிரசாரத்தை முடிக்கும் நேரத்தில், தனது சின்னமான விசில் கீழே விழுந்ததை, ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை உள்ள விஜய் ரசிக்கவில்லை. இதை அபசகுனமாகவும் த.வெ.க.,வினர் எண்ணுகின்றனர்.block_B


@block_P@

 'பண மழை பொழிந்தாலும் விசிலுக்கு ஓட்டு போடுங்கள்'



த.வெ.க., தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை: நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் நம் அரசியல் எதிரியான தீயசக்தி தி.மு.க.,வும், கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் காணும் பிளவுவாத சக்தி பா.ஜ.,வும், சொல்ல முடியாத நெருக்கடிகளையும், நிர்பந்தங்களையும், வேதனைகளையும் கொடுக்கிறது. ஊழல் விஷ சக்திகளால் த.வெ.க.,வை வீழ்த்த முடியாது.

பணத்தை மட்டுமே நம்பி சுயலாபங்களுக்காக அரசியல் செய்யும் அடிமை அரசியல் சூதாடிகளின் எந்த சின்னத்திற்கு நீங்கள் ஓட்டு போட்டாலும், பிளவுவாத சக்திகளுக்கான ஆதரவாகவே அது மாறும். எனவே, எப்போதும் போல இந்த அரசியல் சூதாடிகள் பண மழை பொழிந்தாலும், விசிலுக்கு ஓட்டு போட்டு புரட்சி செய்யுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.block_P

Advertisement