மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி அதிகரிக்கும்: ஆந்திர முதல்வர்
சென்னை: ''மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான், மாநில வளர்ச்சி நன்றாக இருக்கும்,'' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
சென்னையில் நேற்று, அவர் அளித்த பேட்டி:
தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்து விட்டதாக, ராகுலும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் கூறுகின்றனர். இது, என்ன மாதிரியான வெற்றி என்பதை, அவர்கள் தான் கூற வேண்டும். அவர்கள், மகளிருக்கு துரோகம் செய்து விட்டனர்.
நான், கடந்த 1995ல் ஆந்திராவின் ஹைதராபாதில், தகவல் தொழில்நுட்ப துறைக்கு முன்னுரிமை அளித்த போது, சென்னை, பெங்களூரு, புனே, குருகிராம் நகரங்களை முன்மாதிரியாக பார்த்தேன். இன்று, ஹைதராபாத், பெங்களூரு உயர் நிலைக்கு சென்று விட்டன; சென்னையை பற்றி யாரும் பேசுவதில்லை.
பிரதமர் மோடி, இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க விரும்புகிறார். உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தில், 11வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி செய்யும்போது, இரட்டை இன்ஜின் அரசின் வேகத்தை நான் பார்த்திருக்கிறேன்.
மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு கடந்த, 12 ஆண்டுகளில், 14 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான், மாநில வளர்ச்சி நன்றாக இருக்கும். தமிழக மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மிக சிறந்த முதல்வர். கடின உழைப்பாளி . மாநில நலனில் மிக்க அக்கறை கொண்டவர். நமக்கு இப்படி ஒருவர் கிடைக்கவில்லையே ?.
உங்களுக்கு தெரிகிறது பகுத்தறிவு என்று பெருமையாக பேசிக்கொண்டு அறிவே இல்லாத தற்குறி தலைவர்கள் இங்குள்ளார்கள் என்ன செய்வது.
Well said Naidu garu.
இவர் புத்தி சாலி. வருமானத்தை மாநிலத்தின் எப்படி உயர்த்துவது என தெரிந்து வைத்திருக்கிறார். உலகிலேயே மிகப்பெரிய GOOGLE நிறுவனத்தை விசாகப்பட்டினம் நகரில் நிறுவி வருமானத்திற்கு வழி வகுத்திருக்கிறார்.
எங்களுக்கு குடும்ப நிதி வளர்ச்சி தான் முக்கியம்
தனது குடும்பத்தைக் காப்பாத்திக்க மட்டும்தான் எங்க கிம்ச்சை மன்னர் ஒன்றியத்துடன் இணக்கமாக, ஒன்றி இருப்பார் ....
நீங்க உங்க மாமனாரை ஏமாத்தி எப்படி வந்தீங்கன்னு எல்லோருக்கும் தெரியும்.. நீங்க ஆந்திராவை முதல்ல சரியாய் பாருங்க. நீங்க எல்லாம் ஒரு ஆளு
55 வருட அரசியல் மற்றும் பல வருட ஆட்சி அனுபவம் உள்ளவர். இந்த கொள்கையினால் தான் பரந்த ஆந்திர மாநிலத்தையும், வெறும் விவசாய நிலங்கள் மட்டும் கொண்ட பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தையும், மிக பெரிய பொருளாதார சக்தியாகவும் மாற்றி வருகிறார். இந்தியாவின் மிக சிறந்த முதல்வர் என்பதை 20 ஆண்டுகள் நிரூபித்து உள்ளார்.
மிகச் சரியான கருத்து அவரவர் மாநிலத்தை முன்னேற்றுவது ஒன்றுதான் குறிக்கோள் என்றால் தொலை நோக்குப் பார்வையின்றி தேவையற்ற பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக் கொள்ளக்கூடாது. நம் உரிமைகள் பாதிக்கப்படாதவரை முடிந்தவரை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நமக்கு வேண்டியதைச் ஆதித்துக் கொள்ள வேண்டும். தனிமனிதர் இகழ்ச்சி அறவே கூடாது. தவறுகள் இருந்தால், சுட்டிக் காட்டலாம் ஆனால் நம் மீது தவறு சொல்ல வழியிருக்கக்கூடாது
மத்திய பாஜக ஒரு சிறுபான்மை அரசாங்கம். அது தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் கட்சி போன்ற இரண்டு அடிமைத்தனமான கட்சிகளின் உதவியுடன் இயங்கி வருகிறது
பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், சிறுபான்மை மத்திய அரசு வழங்கிய தரவுகளுக்கும் சென்று பாருங்கள். அதில், பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களும் எல்லா வகையிலும் மிக மோசமாக இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முகாமிட்டுள்ள மத்திய அமைச்சர்களால் ஒரு எம்.எல்.ஏ-வைக் கூடப் பெற முடியவில்லை.மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை