ஆதி சங்கரர் மற்றும் ராமானுஜர் ஜெயந்தி விழாவையொட்டி பாராயணம்

புதுச்சேரி: ஆதி சங்கரர் மற்றும் ராமானுஜர் ஜெயந்தி விழாவையொட்டி, அகண்ட லலிதா சகஸ்ர நாமம் மற்றும் விஷ்ணு சகஸ்ர நாமம் நடந்தது.

புதுச்சேரி சித்தன்குடி ஜெயராம் திருமண நிலையத்தில், புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் நேற்று காலை அகண்ட லலிதா சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம் நடந்தது. அதில், ஆதி சங்கரர் இயற்றிய சுலோகங்கள் அடங்கிய பாராயணத்தை 1,008 பக்தர்கள் சேர்ந்து படித்தனர்.

அதனை தொடர்ந்து, அம்மாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்ம சம்ரக் ஷண சமிதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்ம சம்ரக் ஷண சமிதியினர் செய்திருந்தனர்.

Advertisement