சுங்கச்சாவடியில் சைக்கிளுக்கு ரூ.25 கட்டணம் வசூலிப்பு
பெங்களூரு: தனியார் சுங்கச்சாவடியில் சைக்கிளில் வந்த நபரிடம் 25 ரூபாய் கட்டணம் வசூலித்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு நைஸ் சாலையில் தனியார் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச்சாவடியில், சைக்கிளில் வந்த நபருக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சைக்கிள் ஓட்டி செல்லும் நபரிடம் சுங்கச்சாவடி ஊழியர் 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார். இதற்கு சைக்கிளில் வந்த நபர் மறுப்பு தெரிவிக்கிறார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். பின், வேறு வழியின்றி சைக்கிளில் வந்த நபர், 25 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு செல்வது வீடியோவில் பதிவாகி உள்ளது.
இது குறித்து, சைக்கிள் ஓட்டி வந்த நபர் கூறியதாவது:
நான் இந்தியாவின் பல மாநிலங்களில் சைக்கிளிலே பயணம் செய்து உள்ளேன். ஆனால், எந்த மாநிலத்திலும் சுங்கச்சாவடியில் சைக்கிள்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. சுங்கச்சாவடியில் சைக்கிளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என சட்டம் கூறுகிறது.
அப்படி இருக்கையில் சட்டத்தை மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை