பத்திரங்கள், பண்டு அடமானம் வைத்து பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் வருகிறது செபியின் புது விதி


நம்மிடம் இருக்கும் பணத்தை விட கூடுதலாக பங்குகளை வாங்க, பங்குச்சந்தையில் 'மார்ஜின் டிரேடிங்' என்ற வசதி இருக்கிறது. அதாவது, நம்மிடம் உள்ள பங்குகளின் மதிப்பு அடிப்படையில், வர்த்தகத்துக்கு ஒரு பங்கு வாங்க பணம் இருந்தால், புரோக்கரிடம் கடன் பெற்று நான்கு பங்குகளை வாங்க அனுமதிக்கப்படும். இந்த வசதியில் 'செபி' தற்போது நிறைய புதிய மாற்றங்களை கொண்டு வரப்போகிறது.

Tamil News

என்னென்ன மாற்றங்கள்



* இனி, பங்குகள் மட்டுமின்றி அரசு பத்திரங்கள், மியூச்சுவல் பண்டு யூனிட்டுகள், தங்க பத்திரங்கள் மற்றும் 'ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்' போன்ற சொத்துகளையும் பிணையாக ஏற்க அனுமதி
* பங்குகளை விற்ற பிறகு வர வேண்டிய தொகையையும் பிணையாக பயன்படுத்தி, மேலும் பங்குகளை வாங்க முதலீட்டாளர்களுக்கு அனுமதி

* புரோக்கர்கள் இனி கடன் பத்திரங்கள் வாயிலாகவும் நிதி திரட்டி, வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி கடன் வழங்க வழிவகை

* 'மார்ஜின் டிரேடிங்' வசதியை வழங்கும் புரோக்கர்களின் குறைந்தபட்ச நிகர மதிப்பை 3 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்த திட்டம்

*'எல்.எல்.பி.,' நிறுவன அமைப்பில் உள்ள புரோக்கர்களுக்கும் இனி இந்த வசதி

* சந்தை அபாயங்களை குறைக்கும் நோக்கில், முதலீட்டாளர்கள் ஆர்டர் போடும் போதே அது 'எம்.டி.எப்.,' வர்த்தகமா என்பதில் தெளிவு

* அடமானம் வைத்துள்ள பங்குகள், ஒருவேளை பங்குச்சந்தை குறியீட்டில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது வர்த்தக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலோ, அந்த பங்குகளுக்கு பதிலாக வேறு பங்குகளை அடமான மாக மாற்றி கொள்ள 15 நாட்கள் கால அவகாசம்

* புரோக்கர் மற்றும் வாடிக்கையாளர் இடையே ஏற்படும் தகராறுகளை குறைக்க, அனைத்து பங்கு சந்தைகளுக்கும் பொதுவான 'உரிமைகள் மற்றும் கடமைகள்' ஆவணம்

* பிழை இல்லாத பரிவர்த்தனைக்காக 'ஆட்டோ - பிளட்ஜ்' முறை.


@block_B@ யாருக்கு லாபம்?

தங்க பத்திரங்கள் அல்லது மியூச்சுவல் பண்டுகளை கையில் வைத்திருப்பவர்கள், அவற்றை விற்காமலேயே பிணையாக வைத்து, சந்தையில் பங்குகளை வாங்க கூடுதல் நிதி பெற முடியும். இது சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும். தற்போது இந்த 'மார்ஜின் டிரேடிங்' புத்தகத்தின் மதிப்பு 1.20 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தால், இது மேலும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.block_B

Advertisement