நாளை விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சென்னை: தேர்தல் நாளான, நாளை விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, தொழிலகப் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மக்கள் பிரதிநித்துவ சட்டம் 135பி பிரிவின் கீழ், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி, தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஓட்டுபோட வசதியாக, தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.

ஓட்டுப்பதிவு அன்று, விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க, மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

விடுமுறை விடாத நிறுவனங்கள் குறித்து, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் கார்த்திகேயன் - 94442 21011, கமலக்கண்ணன் 98846 75712, மணிசங்கர் 99404 68249, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலக நிர்வாக அலுவலர் சூரியா 98844 70526 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement