மெக்சிகோ பிரமிடில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பிரமிடு ஒன்றில் சுற்றுலா பயணியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற் கொலை செய்து கொண்டார்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் பிரசித்தி பெற்ற தியோத்திவாக்கன் தொல்லியல் தளத்தில் உள்ள பிரமிடுகளை, பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர் நேற்று ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, காலை 11:30 மணிக்கு, பிரமிடு உச்சியில் இருந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.

சத்தம் கேட்ட பலர் அச்சத்தில் தரையில் படுத்தனர்; பலர் அலறியடித்து ஓடினர். துப்பாக்கியால் சுட்ட நபர் பின், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தில், கனடாவைச் சேர்ந்த ஒருவர் பலியானார். அமெரிக்கா, கொலம்பியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement