அயோத்தி, காசி, கயா செல்ல ஆன்மிக சிறப்பு ரயில் அறிவிப்பு
சென்னை: கோடை விடுமுறையில், அயோத்தி, காசி, கயா உள்ளிட்ட இடங்களை காணும் வகையில், ஆன்மிக சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'ரயில்வே பாரத் கவுரவ்' ரயில் திட்டத்தின் கீழ், தனியார் நிறுவன பங்களிப்புடன், திவ்ய க்ஷேத்ராடனம் சிறப்பு ஆன்மிக சிறப்பு ரயில் இயக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து, வரும் மே 13ல் புறப்படும் ஆன்மிக ரயில், திருச்சி, விருத்தாசலம் விழுப்புரம், எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது.
மொத்தம் 10 நாட்கள் கொண்ட, ஆன்மிக சுற்றுலாவில், 3ம் வகுப்பு 'ஏசி' யில், ஒருவருக்கு 31,500 ரூபாய், ஸ்லீப்பரில் 23,950 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வைகாசி முதல் நாளில் வரும் சிவராத்திரி அன்று, பூரி ஜெகநாதர், கோனார்க் சூரிய கோவில், லிங்கராஜ் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அயோத்தி ராமர் கோவில் தரிசனம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடுதல், கயாவில் பூஜை மற்றும் பிண்ட தானம் வழிபாடு, விஷ்ணு பாதம் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தகவல் பெற www.tourtimes.in இணையதளம் மற்றும் 73058 58585 எண்ணை தொடர்பு கொள்ள லாம் என 'டூர் டைம்ஸ்' சுற்றுலா நிறு வனம் தெரிவித்துள்ளது.
தயவு செய்து இந்த ரயில் டூரில் செல்லாதீர்கள். கடந்த மார்ச் மாதம் கடைசியில் பத்து நாள் இந்த பயணம் சென்றிருந்தேன். இது லாட்டரி மார்ட்டின் குரூப் மூலம் இயக்கப்படும் தனியார் ரயில். தனியார் மூலம் இயக்கப் படுவதால் ஐஆர்சிடிசி யைவிட மிக நன்றாக இருக்கும் என எண்ணிப் சென்றேன். மிக்க ஏமாற்றம் அடைந்தேன். சாப்பாடு சரி இருக்காது, இட்லி முதல் பாதம் வரை எதுவுமே சரியாக வேக வைக்கவில்லை. ஊறுகாய் அப்பளம் இரண்டு மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். சவுத் இன்டியின் உணவு என்ற போர்வையில் எல்லாமே உடலுக்கு ஒத்து வராத வெரைட்டி. சேமியா போன்ற உணவு வகைகள் தினமும் கொடுப்பார்கள். சுகாதாரம் மிக மோசம். நான் இரண்டாவது ஏசி வகுப்பில் சென்றேன். அந்த பெட்டியில் பயணித்த முக்கால்வாசிப் பேர் நோயுற்றோம். எல்லோரும் சீனியர் சிட்டிசன் கள்.
ரயில் குறித்த நேரத்திற்கு போய்ச் சேரவில்லை. ஆகவே செல்லும் இடங்களில் பாதி இடங்களில் பார்வையிட நேரம் கிடைக்காது. கயா செல்கையில் ரயில் கழிவறையில் குளித்து கோயிலுக்கு சென்றோம். பகலில் தான் பிண்ட தானம் செய்ய வேண்டும், ஆனால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்தோம். விளம்பரம் பெரிதாக இருக்கும். நாம் கொடுக்கும் பணத்திற்கு உரிய பலன்கள் இல்லை. இந்த படத்தில் ஆறு ஏழு நாட்கள் செல்லும் விமான சுற்றுலா சென்று வரலாம். அதில் தங்குவதற்கு நல்ல ஹோட்டல் அறை நல்ல உணவு மட்டுமின்றி எல்லா இடங்களையும் பார்த்து வரலாம்.மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை