தி.மு.க.,வுக்கு சென்ற மாஜி கவுன்சிலர்கள் அ.தி.மு.க., வேட்பாளர், கட்சியினர் அதிர்ச்சி

ஓசூர்: ஓசூர் தொகுதியில், கடைசி நேரத்தில், தி.மு.க.,வுக்கு, அ.தி.மு.க., மாஜி கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்-றதால், அ.தி.மு.க., வேட்பாளர் மற்றும் கட்சியினர் அதிர்ச்சிய-டைந்து உள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் சத்யா, அ.தி.மு.க., சார்பில் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது. எதிர்க்கட்சி நிர்வாகிகளை வளைத்து போட, தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். அந்த அளவிற்கு ஓட்டு வங்கியை தங்கள் பக்கம் திருப்ப போராடுகின்-றனர். இதில் ஒரு படி மேலே சென்று, அ.தி.மு.க., மாஜி நக-ராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளை, தி.மு.க., தங்கள் பக்கம் இழுத்துள்ளது.
அதாவது, மாஜி கவுன்சிலர்களான சிஜி கிருஷ்ணன், ரோஜா, சரோஜா, அ.தி.மு.க., வட்ட செயலாளர்கள் கேசவமூர்த்தி, சாதிக்-பாபு, முன்னாள் வட்ட செயலாளர் சையத் ஜூனைத், ரஜினி மக்கள் மன்ற மாநகர செயலாளர் பாண்டியன், இணை செய-லாளர் ராஜ்குமார், முன்னாள் மேலவை பிரதிநிதி விஜயகுமார் உட்பட ஒரு கூட்டத்தையே, தி.மு.க., தக்கம் பக்கம் இழுத்து, கடந்த, 19ம் தேதி ஓசூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், முதல்வர் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைத்தது.
இவர்கள் கட்சியில் இணைய போவதை அறிந்த, அ.தி.மு.க., வேட்பாளர் பாலகிருஷ்ணாரெட்டி, தன் ஆதரவாளர்களை அனுப்பி, கட்சியை விட்டு செல்ல வேண்டாம் என கேட்-டுள்ளார். ஆனால், அவரது செயல்பாடு சரியில்லை எனக்கூறி, தி.மு.க.,விற்கு அனைவரும் சென்றுள்ளனர்.
நாளை (ஏப்., 23) ஓட்டுப்
பதிவு நடக்க உள்ள நிலையில், அ.தி.மு.க., மாஜி கவுன்சிலர்கள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை, தி.மு.க., தங்கள் பக்கம் இழுத்துள்ளதால், அ.தி.மு.க., கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இது ஓட்டு வங்கியை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, தி.மு.க.,வில் இணைந்த நிர்வாகிகள் கூறும்போது:
அ.தி.மு.க., வேட்பாளர் பாலகிருஷ்ணாரெட்டி, யாரையும் கண்டு-கொள்வதில்லை, மரியாதையும் கொடுப்பதில்லை. தேர்தல் வரும்போது மட்டும், ஆட்களை அனுப்பி வைப்பார். அவருக்கு முன்பாக கட்சியில் இருப்பவர்களுக்கு கூட பதவி போட-வில்லை. எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அழைப்பதில்லை. எங்-களை ஓரம் கட்டி வைத்திருந்தார். அந்த நேரத்தில், தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வந்தது. நாங்களும் அங்கு சென்று சேர்ந்து விட்டோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement