மின்சார வாகன காத்திருப்பு காலம் 1 மாதம் வரை அதிகரிப்பு

சென்னை, வாங்குவோர் அதிகரித்ததால், ஒரு வாரமாக இருந்த மின்சார இருசக்கர வாகனங்களின் டெலிவரி காத்திருப்பு காலம், ஒரு மாதம் வரை அதிகரித்துள்ளதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர். மின்சார கார்களின் காத்திருப்பு காலம், இரண்டு வாரங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

டீலர்கள் கூறியதாவது:

மேற்கு ஆசிய போர் துவங்கியது முதல், மின்சார இருசக்கர வாகனங்கன் விசாரனையில் இரு மடங்கும், முன்பதிவு 50 சதவீதமும் அதிகரித்தன. மின்சார கார்களின் முன்பதிவு 20 முதல் 30 சதவீதம் அதிகரித்தன.

இந்நிலையில், ஒரு வாரமாக இருந்த மின்சார இருசக்கர வாகனங்களின் காத்திருப்பு காலம், தற்போது 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல், மின்சார கார்களுக்கு, 4ல் இருந்து ஆறு வாரங்களாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement